குழந்தை வளர்ப்பு சாஸ்திரம் – சில குறிப்புகள்

போன வாரம் கப்பன் பார்க் உலாவில் என் ஆப்த நண்பர் (ஆப்தர்-ஈகோ என்றும் சொல்லலாம்) மாத்ருபூதத்துடன் மாத்தனாடிக்கொண்டிருந்தபோது, `ஐ-பேட் அடிக்க்ஷன்’ பற்றி நான் சமீபத்தில் புலம்பித் தள்ளியிருந்த ப்ளாக் பற்றிப் பேச்சு வந்தது. (`மாத்ருபூதம்’  ஒரு புனைப்பெயர் என்ற உங்கள் யூகம் சரியே. ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது ஆகையால், நான் இட்டுக்கட்டிய பெயர் அது.)

மாத்ருபூதம் மூன்று குழந்தைகளை கஷ்டப்பட்டு கரையேற்றிய `தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற’ அனுபவஸ்தர். அவருடனான உரையாடலில் கிடைக்கப்பெற்ற குழந்தை வளர்ப்பு சாஸ்திர குறிப்புகள், கலிமுற்றிய காலத்தில் குழந்தைகளை வளர்க்கத் திக்குமுக்காடிக் கண்முழி பிதுங்கிக் கொண்டிருக்கும்  சில, (பல?, பெரும்பாலான?) க்ளூலெஸ் அப்பன், ஆத்தாள்களின் கவனத்திற்கெனக் கீழே கொடுக்கப்பட்டதைக் கண்டு பயனடைவீர்!

Image result for hurts when i do

  1. இன்னும் மிடில் ஸ்கூலிலோ ஹைஸ்கூலிலோ இருக்கும் உங்கள் டீனேஜ் மகனுக்கோ/மகளுக்கோ ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக் கொடுக்க ஒரு அவசரமும் இல்லை. அதைவிட வேலியில் போகும் ஓணானை வேட்டியில் எடுத்துவிட்டுகொள்வது உத்தமம்! அவர்கள் தாங்களாகவே ட்யூஷனுக்கோ, ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கோ, எக்ஸ்ட்ரா கரிக்யுலர் ஆக்டிவிஸுக்கோ போகத்தொடங்கும் பருவத்தில் ஒரு பேஸிக் `ஃபீச்சர் ஃபோன்’ வாங்கிக்கொடுத்தால் போதுமானது.
  2. பெற்றோர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோனை அப்க்ரேட் செய்யும்போது தங்கள் பழைய ஃபோனை மகனுக்கோ/மகளுக்கோ கொடுப்பது என்பது மடத்தனமான காரியம் (இந்த இடத்தில் நான் ஒரு `போக்கர் ஃபேஸ்’ மெயிண்டெய்ன் பண்ணினது மாத்ருபூதத்தின் கவனத்திற்குத் தப்பவில்லை – Most ironically a poker face is sometimes an absolute give away!) 
  3. குழந்தைகளுக்கு ஸ்கூல்வர்க்கிற்கு கம்ப்யூட்டர் வாங்கத்தேவை வந்து வாங்கும் பட்சத்தில், கம்ப்யூட்டரின் பாஸ்வர்ட் உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கவேண்டும். அத்தியாவசியமற்ற அளவிற்கு அதிமேலாக ப்ரைவஸி முதலில் அளித்துவிட்டால், உங்கள் கதை கந்தல்!  தும்பைவிட்டுவிட்டு வால் பிடித்த கதையாகப் போய்முடியும். ஸ்கூலில் ரெகமண்ட் பண்ணும் பாரென்டல் கன்ட்ரோல் ஸாஃப்ட்வேரை இதோ இந்தவாரம், அடுத்தவாரம் என்று தள்ளிப்போடாமல், உடனுக்குடன் வாங்கி இன்ஸ்டால் பண்ணுவது மிக முக்கியம்.
  4. வயர்லெஸ் ஆக்ஸெஸ் என்பது டீனேஜர்களுக்கு பெரும்பாலும் அன்றாடரீதியில் அவசியமில்லாதது. பொது அறையில் லான் கேபிள் மூலமாக இன்டெர்நெட்டுக்கு கனெக்ட் பண்ணுவதுதான் உதவும். (லேட்டஸ்ட் அமெரிக்கன் டீ.வீ ஷோக்களை இல்லீகல் ஸ்ட்ரீமிங்க் மீடியா ஸைட்ஸ் மூலம் ஆதியோடந்தமாக டவுன்லோட் பண்ணிப் பார்த்து வைப்பது ஸ்கூல் ஹோம்வர்க் ஆன பட்சத்தில் தாராளாமாக வை-ஃபை ஆக்ஸெஸ் கொடுங்கள்!)
  5. பூனை கண்ணைமூடிக்கொண்டால் பூலோகம் அஸ்தமித்துவிடாது! நீங்கள்  வயர்லெஸ் ஆக்ஸெஸ் கொடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு வயர்லெஸ் ஆக்ஸெஸ் இல்லை என்று முடிவுக்கு வந்துவிடாதீர்கள். சந்தில் சமார்த்தனையாக, பக்கத்துவீட்டு பையன்/பையி மூலம் பாஸ்வேர்டை பீராய்ந்து அவர்கள் வீட்டு கனெக்க்ஷனில் காலக்க்ஷேபம் கேட்டுக்கொண்டிருப்பார்கள் உங்கள் கண்/காதுக்குப் பின்னால். 
  6. ஓரளவுக்கு வளர்ந்த ஆனால் இன்னும் ஸ்கூலில் இருக்கும் மகனுக்கோ/மகளுக்கோ ஒரு ஸ்டேஜில் பியர் ப்ரெஷர் காரணமாக ஸ்மார்ட்ஃபோன் வாங்கிக்கொடுப்பது தவிர்க்கமுடியாது போகலாம். வேறு வழியில்லாது கொடுக்கும் பட்சத்தில், என்ன வசதிகளை அதில் பயன்படுத்தலாம் என்று தெளிவான வரையறைகளை அமைப்பது அவசியம். முக்கியமாக apps. பெற்றோரின் வயிற்றில் புளியைக் கரைக்கவே கிளம்பியிருக்கும் ஸ்நாப்-சாட் வகை `ஆப்’களை அனுமதித்தால் ஆப்பு உங்களுக்கே!
  7. அதேபோல் ஸோஷியல் மீடியா. No self respecting teenager is on the same social media platform as their parents. நீங்கள் ஃபேஸ்புக் என்றால் உங்கள் டீனேஜர் இன்ஸ்டக்ராமில். ஓரளவுக்கேனும் அவர்களின் ஸோஷியல் மீடியா ஆக்டிவிடீஸ் என்னவென்று உங்களுக்குத் தெரிவது அவசியம். நீங்கள் தடுக்கில் புகுந்தால், உங்கள் டீனேஜர் கோலத்தில் புகுந்து மல்டிபிள் இன்ஸ்டக்ராம் அக்கவுண்ட்ஸ் அமைத்துக்கொண்டு, Dr Jekyll ஆகவும் Mr Hyde ஆகவும் பவனிவர வாய்ப்பு உண்டு என்பதை உணர்ந்துகொள்வீர்!
  8. எல்லா டிவைஸஸுக்கும் டைம்-லிமிட் அமைத்து ஒரு செக்-இன்/செக்-அவுட் ப்ரோட்டோகால் ஏற்படுத்துவது அவசியம். கம்ப்யூட்டர் ஸிஸ்டெம்ஸ் ஸெக்யூரிடியில் புழங்கும் Principle of least privilege போல, தேவையானவற்றை மட்டுமே அனுமதிப்பது உத்தமம். பாதராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஒரு ஹைஸ்கூல் டீனேஜருக்கு ஸெல்போன் தேவையில்லை. இத்யாதி, இத்யாதி …
  9. உங்கள் டீனேஜரின் ஃப்ரெண்ட்ஸ் ஸர்க்கிள், அவர்கள் பெற்றோர் ஆகியோரை நீங்கள் அறிந்திருப்பது அவசியம். அந்த காலத்தில் க்ளாஸில் ப்ராக்ஸி அட்டெண்டன்ஸ் கொடுத்ததுபோல், இந்த காலத்தில் உங்கள் டீனேஜரின் ஃப்ரெண்டே தன் தாயையோ/தந்தையையோ இம்பெர்ஸனேட் பண்ணி உங்களுடன் பேசி, உங்கள் மகனையோ/மகளையோ பார்ட்டிக்கு அனுப்புமாறு ப்ராக்ஸி இன்விடேஷன் ஃபோன் மூலமாக வைக்கும் பட்சத்தில், நீங்க கண்டுபிடிக்க உதவும் பாருங்க? 
  10. Ultimately, your job is to convey to your teen that your interest is to protect him/her. And it is not about constant distrust. Convincing them of that is your greatest challenge AND your greatest opportunity!  ரிஷ்யஸ்ருங்கர் மாதிரி குழந்தைகளை வளர்க்கிறது அல்ல குறிக்கோள்.

மாத்ருபூதம் தான் சொன்னதையெல்லாம் நான் அசைபோடும்பொருட்டு கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். அவர் சொன்னது எதுவும் பெரிய கண்டுபிடிப்பு இல்லை – எல்லாம் வெறும் காமன்ஸென்ஸ் சமாச்சாரங்களே. பின்னர் ஏன் மலைப்பாக இருக்கிறது என்று யோசித்தேன். குழந்தை வளர்ப்பு என்பது கச்சாமுச்சாவென்று காம்ப்ளிகேட் ஆகிவிட்டது கலிகாலத்தில்! Yet என் வேறொரு நண்பர் அசோகன் மேற்கோள்காட்டியதுபோல There Is No Job More Important Than Parenting.

“அடுத்து நீங்க என்ன கேக்கப்போறீங்கன்னு எனக்குத் தெரியும். `இந்த வழிமுறைகளை எல்லாம் கடைப்பிடித்தால் குழந்தைகள் ஒழுங்காக வளர்ந்துவிடுவார்களா?’ அப்படின்னுதானே?” என்றார் மாத்ருபூதம்.

இது அவருடைய ஸிக்னேச்சர் ஸ்டைல். “நீங்க சொல்லவரது இதானே”, “நீங்க நினைக்கிறது இதானே” என்று ஒரு பாத்தி வெட்டி பாதை அமைத்துக்கொள்வது.

`ஆமாம்’ என்பதற்கும் `இல்லை’ என்பதற்கும் நடு ஸென்டரில் ஒரு மாதிரியாக நான் தலையை ஒரு ஆட்டு ஆட்டிவைத்தேன். 

தொடர்ந்தார் மாத்ருபூதம்:

“வர்ல்ட் ஃபேமஸ் இன்வெஸ்டரான ராக்கஃபெல்லரிடம் ஒரு முறை ஒரு இளைஞன் “Mr. Rockefeller, what do you think Standard Oil shares will do?” அப்படின்னு கேட்டானாம். அதுக்கு ரொம்ப நேரம் ஆழ்ந்து யோசித்து பிறகு ராக்கஃபெல்லர் “Young man, I think they will fluctuate.” என்றாராம்.”

“அதுமாதிரி இந்த வழிமுறைகளையெல்லாம் கடைபிடித்தால், குழந்தைகள் `வளர்ந்துவிடுவார்கள்’ அப்படின்னு கண்டிப்பா சொல்லிவிடலாம்!” என்று சொல்லி ஒரு வெடிச் சிரிப்பு சிரித்த மாத்ருபூதத்தின் மீது – தன் கடமையை முடிந்து, அவ்வப்போது பணம், மெடிகல் இன்ஷ்யூரன்ஸ், வெளிநாட்டுப் பயண டிக்கெட்டுகள் என்று மகன்/மகள்களால் திணிக்கப்படும் மாத்ருபூதத்தின் மீது – வந்த மெல்லிய எரிச்சலை அடக்கிக்கொண்டு நானும் ஒரு ஸ்மைல் பண்ணிவைத்தேன்!

பின்குறிப்பு: இந்த கட்டுரைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி நான் தேடிய ஒரு ஜோக் கிடைக்கவேயில்லை (டாக்டர்: இந்த மாத்திரையை ஒருமாசம் சாப்பிடுங்க. பேஷண்ட்: ஒரு மாசம் சாப்பிட்டா, வலி குணமாயிடுமா டாக்டர்? டாக்டர்: இல்லை, வலி பழகிடும்!) ஆனால் தேடியபோது நான் தடுக்கிவிழுந்த ஒரு சுவாரஸ்யமான தகவல்:

A doctor was talking to a patient. “Doctor,” the patient says, “Whenever I get up after a sleep, I feel dizzy for half an hour, then I’m all right.” “Then wait for half an hour before getting up,” said the doctor. 

நீங்கள் நிச்சயம் பலமுறை கேட்டிடுருக்கக்கூடிய இந்த ஜோக் எவ்வளவு பழையது தெரியுமா? குறைந்தபட்சம் 1800 வருஷம் பழையது!

மேலும் படிக்க:

Parenting in the time of WhatsApp

ஆயகலைகள் அறுபத்து நான்கினிலும் அற்புத விற்பன்னம்.

தந்தை மகற்காற்று நன்றி

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக்காம்பு

கண்ணோ கமலப்பூ, கையிரண்டும் தாமரைப்பூ! நின் மேனி மகிழம்பூ, மெல்லினல்லாள் சிற்றடியாள் …

ஒரு ஊர்ல ஒரு நரியாம், அதோட கதை சரியாம் !

அதீத கவனக்குறைவும், அளவற்ற குறும்பும் (ADHD/ADD)

 

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக்காம்பு

வரும் மார்ச்சு மாதம் 29ம் திகதி ஒருவேளை நீங்கள் நம்ம பெங்களூரின் சிவன் செட்டி கார்டன் பக்கம் வரநேர்ந்தால், ண்ட்ரவேர் தவிர இதர ஆடைகளை அவிழ்த்துவிட்டு “ஆடுவோமே! பள்ளுப் பாடுவேமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்!” என்று கும்மியடித்துக் களித்துக் கூத்தாடும் ஒரு வியக்தியை காணக்கூடும். 

“யாரப்பா அது இந்த ஆனந்தத் தாண்டவமூர்த்தி?” என்று கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் “அட! வேறு யாரும் இல்ல, நம்ம அபிமான ப்ளாக்கர்தேன்!” என்று இனம் கண்டுகொள்வீர்கள்.

(ஏற்கெனவே லூஸான மறைகள் தவிர, மற்றபடி) என் `திமாக்’ ஒன்றும் புதிதாக`கராப் ஹோ கயா’கவில்லை என்று உறுதியளிக்கிறேன். என் தக்கதிமி நர்த்தனத்திற்குப் பின்னணியில் தக்க காரணம் உந்தி!  

மார்ச்சு 29ம் 2019! அந்த நாள் என் வாழ்வின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாள்! மூன்று வருஷங்களாக அஷ்டமத்தில் உச்சத்தில் இருந்துகொண்டு உண்டு இல்லை என்று உலுக்கியெடுத்த சனி விலகும் நாள் அப்படின்னா சும்மாவா?

விஷயம் இதுதான்: அன்றோடு என் அருமை மகனான ரெட்டைவால் ரங்குடுவிற்கு மிடில் ஸ்கூல் முடிகிறது. நாசமாய் போன இந்த ஸ்கூலில் மிடில் ஸ்கூலில் கரிக்குலம், டீச்சிங்க் மெதடாலஜி, ஹோம் வர்க், க்ளாஸ் வர்க், ப்ராஜெக்ட்ஸ் ஸப்மிஷன் என்று பாதாதிகேசம் அம்புட்டையும்  இந்தப் பாழாய்ப்போன ஐ-பேடின் மூலம்தான் நடத்தித்தொலைக்கிறார்கள்.

பதினொன்றிலிருந்து பதிமூன்று வயதுவரையான வயதுக் குழந்தைகளுக்கு ஐ-பேடும், முழு ஹைஸ்பீட் ப்ராட்பேண்ட் வயர்லெஸ் கனெக்டிவிடியும்  கொடுப்பதன் விபரீதம் புரியாத ஞானசூன்யங்கள் அப்பாவிகள், `ஸ்கூலில் boy scoutsகளுக்கு AK-47 assault rifleகளையும் unlimited ammunition ரவுண்டுகளையும் கொடுத்தால் என்ன நடக்கும்?’ என்ற கற்பனைக் குதிரையில் சற்றே சஞ்சாரம் பண்ணிப்பார்த்தல் உதவலாம்.

பாடப்புத்தககங்களே கிடையாது: எல்லா ஸ்டடி மெடீரியல்ஸும் ஆன்லைன்தேன்! 

கொஞ்சம் இந்தப்பக்கம் அந்தப்பக்கம் நாம் அசைந்தால், கான்டெக்ஸ்ட் ஸ்விட்ச் பண்ணி லேடஸ்ட் வீடியோ கேமையோ, அல்லது யூட்யூபில் கார் ரேஸிங்கையோ பார்க்க ஆரம்பித்துவிடும் குழந்தை கூடவே இருந்துகொண்டு கண்கொத்திப்பாம்பு போல கண்காணிப்பது சாத்யமா?

புராணக்கதைகளில் வரும் `வெட்ட வெட்ட தலை முளைக்கும் அசுரனை’ மாதிரி நாம் டெலீட் பண்ணப் பண்ண, மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கும் கேம்ஸ்.

புனரபி ஜனனம், புனரபி மரணம்!

ஐ-பேடில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கேம்ஸ்களை துப்புத்துலக்கிக் கண்டுபிடிக்கும் உங்கள் திறனுக்கும், உங்கள் கண்ணில் மண்ணைத்தூவி அவற்றை முன்னையினும் நூதனமான வழிகளில் ஸ்மக்கிள் பண்ணி இன்ஸ்டால் பண்ணும் இன்றைய தலைமுறையினரின் இஞ்ஜென்யவிடிக்கும் ஆன எவெர்-எஸ்கெலேட்டிங்க் ரேஸில் நீங்கள் ஜெயிக்க வாய்ப்பு ஸ்வல்பமும் கூடக் கிடையாது!

இந்த சதுரங்க ஆட்டத்தின் சில காம்பிட்ஸ்கள் சிலமட்டும் இதோ:

  1.  குழந்தை நம் கண்ணில் உடனடியாக படும் மாதிரி “விட்டுவைத்திருக்கும்” கேம்ஸ் அவன் விளையாடும் கேம்ஸே அல்ல. அவை நீங்கள் டெலீட் பண்ணித் திருப்தியடையும் பொருட்டாக மட்டுமே, அவனால் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும், “ஒப்புக்குச் சப்பாணி, ஊருக்கு மாங்கொட்டை” வகை ஸ்மோக்ஸ்க்ரீன்! Perry Mason கதைகளில் வரும் Sergeant Holcomb க்ரைம் ஸீனில் ஒரு துப்பாக்கி கிடைத்ததுமே தேடுவதை நிறுத்துவதைப்போல, நீங்கள் நிறுத்தினார்கள் என்றால் காலி. “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் …” Remember?
  2. இன்னொரு காம்பிட்: முந்தைய தலைமுறையினர், பாடப்புத்தகத்திற்குள் குமுதமோ, வேறெதொ கண்றாவிப் புத்தகமோ படித்த ஸ்ட்ராடஜியின் நவயுக வடிவம்: `ஹோம் வர்க் அஸ்ஸைன்மெண்ட்ஸ்’ என்பது போன்ற `அப்பாவி டைப்ஸ்’ பெயரில் எதேனும் ஃபோல்டர் இருந்தால், அலார்ம்பெல்ஸ்களைக் கற்பனை செய்துகொள்வது உசிதம். ஃபோல்டருக்கு உள்ளேயே ஸ்வைப் பண்ணிப்பார்த்தால் நாலாவது அல்லது ஐந்தாவது ஸ்வைப்பிற்கு அப்புறம் வீடியோ கேம்ஸ் உங்களுக்கு பிரத்யக்க்ஷ தரிசனம் தரமுன்வரும்!
  3. இதற்கும் அடுத்த லெவல், கேமை இன்ஸ்டால் பண்ணி, விளையாடிவிட்டு, அப்பன்/ஆத்தாள் பார்க்கும் முன் தானே டெலீட் பண்ணிவிட்டு, “இந்தப் பூனையும் பால் குடிக்குமா?” அப்படின்னு கேக்கிறமாதிரி பாடம் எதையாவது படிப்பது போல பாவ்லா பண்ணுவது (ஸெட்டிங்க்ஸில் பேட்டரி யூஸேஜில் போய்ப்பார்த்தால் ‘டெலீடட் ஆப்ஸில்’ 45% நேரம் செலவு பண்ணப்பட்டதைக் கண்டறியலாம்.)

பானை சோற்றுக்கு பதமாக சில பருக்கைகள் மட்டுமே நீங்கள் மேற்கண்டவை. 

`காம்பிட்’ என்ற பதத்திற்கு சதுரங்க ஆட்டத்தின் துவக்க மூவ் என்பது பொருள் என்று நினைவுபடுத்துகிறேன்.

You can’t win the game, you can’t break even AND you can’t get out of the game! Hmm. Where does that leave you?


சிலர் இருக்கிறார்கள் – அவர்களோடு எதையாவது விவாதிப்பதைவிட, ஒரு நல்ல கருங்கல் சுவராகப் பார்த்து நன்றாக நம் தலையைக் கொண்டுபோய் முட்டிக்கொள்வது உத்தமம் என்று தோன்றவைக்கும்படியாக! 

என் மகனின் ஸ்கூலின் 6-8 கிரேட் ஸ்ட்யூடண்ஸிற்கு ஐ-பேட் மூலமே பாடபோதனை என்ற உன்னத (உன்மத்த?) முடிவை எடுத்த `பிரஹஸ்பத்னி’ அம்மையார் அவர்களில் சேர்த்தி.

தான் ஒரு மஹாமஹோபாத்தியாயினி என்றும் எதிரில் உட்கார்ந்திருக்கும் பிள்ளையைப் பெற்றவன் ஒரு கலப்படமற்ற முழுமடையன் என்ற முதல் கோணல் ப்ரிமைஸுடன் ஆரம்பிக்கும் உரையாடல் எப்படி முற்றும் கோணல் இல்லாது போகமுடியும்? பள்ளியின் இதர டீச்சர்களும், எத்தனையோ பெற்றவர்களும் இந்த ஐ-பேட் மூலமான கரிக்குலம் பற்றிக் கம்ப்ளெயிண்ட் பண்ணப் பண்ண, இன்னுக்கின்னும் ஓவர்-டிஃபன்ஸிவாகவும் ஹைபர்-ஸென்ஸிடிவ் ஆகவும் போய், நம் வாயை அடைத்து அனுப்பிவிடுகிறார் இந்த அம்மையார்.

காட்ஜட் அடிக்க்ஷன் என்ற பிரம்மாண்டமான, நிஜமான பிரச்சினையை வயசு வித்தியாசம் இல்லாது சர்வமயமாக்கிவிட்டோம் 😦

என் குழந்தைகள் படிக்கும் ஸ்கூல் கோ-ஆர்டினேட்டர் சொன்ன கதை இது: ஸ்கூல் விதிமுறைப்படி, காலையில் ஸ்கூல் ஆரம்பிக்கும்முன் எல்லா மாணவ/மாணவிகளும் தத்தம் ஸ்மார்ட்ஃபோன்களை `செக்-இன்’ பண்ணவேண்டும்.  ஸெபரேஷன் ஆங்க்ஸைடி/வித்ட்ராயல் ஸிம்ப்டம்ஸ் ஆகியவற்றால் தவிக்கும் ஒரு மாணவியைப் பார்த்து டீச்சர் கேட்ட கேள்வி: “ஏம்மா, நான் உன் ஃபோனைத்தானேக் கேக்கிறேன், உன் கிட்னியையா கொடுக்கச் சொல்லிக்கேக்கிறேன்?” மாணவியின் பதில்: “மிஸ், ஒரு கிட்னியை வேணும்னா கொடுத்திடறேன், ஃபோனை மட்டும் பிடுங்கிக்காதீங்க, ப்ளீஸ்!”

மஹாபாரத்தின் முடிவில், குடிபோதையில் மூழ்கிய யாதவர்கள் சிலர், தங்களில் ஒருவனுக்கு ஒரு புடவையைக் கட்டி பெண் போல அலங்கரித்து அங்கே வந்த முனிபுங்கவர் ஒருவரிடம் கொண்டுபோய், “ஐயா, யோக சிரேஷ்டரே, இவளுக்குப் பிறக்கப்போவது ஆணா, பெண்ணா?” என்றார்களாம். கடும்கோபம் கொண்ட அந்த முனிவர், “இவனுக்கு ஒரு உலக்கைப் பிறக்கும்; அது உங்கள் குலத்தையே அழிக்கும்!” என்று சபித்ததாக வரும் கதை உங்களுக்கு நினைவிருக்கலாம்.

யார், எந்த முனிவரை சீண்டி, இந்தக் கோடாலிக் காம்பைப் பெற்றார்களோ, தெரியவில்லை. ஈஸ்வரோ ரக்ஷது!

  

 

 

 

 

 

 

 

 

   

கன்னடக்காகி ஒந்தன்னு ஒத்தி

நம்ம பெங்களூரினல்லி, சரிசுமாரு ஹதினைது வருஷதிந்தா ஹண்ணு தின்னு பீஜா ஹாக்கியும், கஸகட்டி ஹாக்கியும் காலக்க்ஷேபம் மாடிவந்தபோதிலும், நன்ன கன்னடம் “சென்னாகிதீரா?”, “நமஸ்காரா”(!), “கூத்கோளி/தகோளீ”, “சுந்தரவாத ஹுடுகி”(!), “கொத்தில்லா”, மத்தே “ஸ்வல்ப அட்ஜஸ்ட் மாடி” ஆத ஆறே ஆறு வாக்கியகளிலல்லி அடகிபிட்ட ஹீன ஸ்திதியன்னு சீக்ரவாகி சரிபடுஸலு நிர்தரிஸிபிட்டனு!

(சரி, சரி, உங்கள் மேல் கருணை தோரிஸி, தமிழுக்கு கியர்ஷிஃப்ட் மாடிவிடுகிறேன்)

அதற்கு காரணங்கள் இவை:

  1. இதுவரை, ஆரோக்யம் என்றால் அது `புஜபல பராக்கிரம’ மேட்டர் மட்டுமே என்று கொண்டு நல்ல சத்துணவிலும் (`தீவனம்’ அப்படின்னு சில தீவட்டி தடியனுங்க சொல்றது சுத்த அப்பட்ட மண்டகடுப்பினாலேய்ங்க, நீங்க அப்படியில்லைன்னு எனக்குத் தெரியும்) உடல்பயிற்சியிலும் மட்டுமே கவனத்தைச் செலுத்திவந்தேன். அது தப்பு! ‘சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பது உண்மையே என்றாலும், சுவரில் மட்டுமே கவனத்தை செலுத்தினால் அது கழுதை கெட்டால் போய் நிற்கும் குட்டிச்சுவராகப் போய்முடியும் (உவமை/உருவகங்களைக் குழப்புவதற்கு மன்னிக்கவும்.)  மூளை நலத்திற்கும், மன நலனிற்கும் புதுப்புது மொழிகளைக் கற்பது அற்புதமான எக்ஸெர்ஸைஸ்.
  2. புலம் பெயர்ந்து வேறொரு ஊரில் 15 வருஷங்கள் வாழ்ந்தும் உள்ளூரின் பாஷை தெரியாமல் இருப்பது அவ்வூர் மக்களுக்கு நாம் தெரிந்தோ/தெரியாமலோ இழைக்கும் அவமரியாதையே என்ற ரியலைஸேஷன். 
  3.  உள்ளூரின் கலை/இலக்கிய/பண்பாட்டு நிகழ்ச்சிகளை அனுபவிக்க உதவும்; உள்ளூரிலேயே வாலண்டியரிங்க் வாய்ப்புகள் கிடைக்கும் … 

IMG_7970

டிஸம்பர் ஹாலிடேஸில் ஆரம்பித்து இரண்டு மாதங்களில் நிறைய கற்றுக்கொண்டுவிட்டேன். ஃப்ரூஃப் ஆஃப் த பணியாரம் இங்கே.

என் நன்றி உரித்தாவது மூவருக்கு: 1. எப்போது வாட்ஸப்பில் சந்தேகம் கேட்டாலும், விடை உடனே தந்துவிடும் என் கன்னட ஆசிரியை ஸ்வேதா  2. விக்க்ஷனரி 3. கூகிள் ட்ரான்ஸ்லேடர் (கன்னட வாக்கியங்களை காமிராவால் படமெடுத்து விரலால் ஸ்வைப்பினால், நாம் ஸ்வைப்பிய வார்த்தைகள் மொழி பெயர்க்கப்படுகின்றன. உண்மையிலேயே நாம் வாழ்வது பொற்காலத்தில்! ஆடியோ சப்போர்ட்டும் உண்டு. என்ன ? அப்பப்போது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறது. “நித்தம் நித்தம் நெல்லுச்சோறு? நீரிழிவு! பத்திரம்பா!” என்ற என் முந்தையதொரு கட்டுரையைப் படிக்க முயன்ற, தமிழ் படிக்கவராத என் தங்கை ஒருத்திக்கு கூகிள் அளித்த மொழிபெயர்ப்பு:Nitin Nelson and his Nitin Luc rice ? Diabetes! Paragraph Rambha!” – இது இரண்டு வருட முன்னால்.)

முழுமூடர்களான ராஜகுமாரர்களுக்கு விவேகமும், ஞானமும் ஊட்ட, ராஜகுலகுரு விஷ்ணுசர்மனால் உருவாக்கப்பட்ட கதை பஞ்ச தந்திரம் என்றும், அதைப் படித்தோர்க்கெல்லாம் விவேகமும், ஞானமும் உண்டாகும் என்றும் சொல்கிறார்கள். இன்றுவரை கன்னடத்தில் இரண்டு பாகங்கள் படித்துவிட்டேன்! முழுதும் படித்துமுடித்ததும் ஞானச்சுடரொளி கண்ணைப் பறிக்குதா என்று அவசியம் சொல்லவும்! (“`அப்ப இன்னிக்குத் தேதிக்கு நீ அரைவேக்காடுதேன்’ அப்படிங்கிறவங்க எல்லாம் பொறாமைக்காரப் பேர்வழிங்க, நீங்க ஏங்க அவைங்களையெல்லாம் பொருட்படுத்திக்கிட்டு …”)

பின்குறிப்பு: ஸ்போக்கன் கன்னடாதான் கொஞ்சம் இடிக்கிறது. இயல்பான வெர்னாகுலர் பேச்சுவழிமொழியாக இல்லாமல், எழுத்துவகை உயர்கன்னடத்தில் பேசித்தொலைப்பதால் பார்ப்பவர்கள், ஒன்று ஒரு கேனையனைப் பார்ப்பதுபோலவோ அல்லது தமிழ் பேசும் கமலஹாசனைப் பார்ப்பதுபோலவோ பார்க்கிறார்கள்!

(நீங்க என்ன கேக்கவரீங்கன்னு தெரியுது! என் வாயைக் கிளறாதீங்க! ப்ளீஸ்!)

 

  

தற்கால ஆராய்ச்சியின் நெறிமுறை

முன்குறிப்பு: இந்தக் கட்டுரையின் மூலம் ‘ஒண்ணரைப் பக்க நாளேடு’ அல்ல! இதன் பூர்விகம், குலம், கோத்திரம் பின்குறிப்பில் காண்பீர்.


 தமிழைத் தலையாய மொழியாக பிரகடனம் செய்து, ஆங்கிலத்தை இரண்டாம் பட்சத்திற்குத் தள்ளியபின், தமிழுக்கு ஒரு ஆச்சரியமான நிலை ஏற்பட்டது. இதுநாள் வரை செந்தமிழில் பேசிவந்த ஆசிரியர்கள் எல்லாம்  திடீரென்று இங்கிலீஷில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்!  வேட்டியும், ஜுப்பாவும் அணிந்துவந்தோர், ஸூட்டுக்கும், ஷூவுக்கும் உள்ளே தங்கள் தேகத்தைத் திணித்தனர். வணக்கத்திற்கு பதிலாக, ஸல்யூட் அடித்து, ‘குட் மாணிங்க்’, ‘குட் யீவினிங்க்’ சொல்லத் தொடங்கினர்.

Image result for graduation hats in the air

பார்க்கும்போது வழக்கப்படி, “வணக்கம் ஐயா, நலமா?” என்று கேட்டால், “வணக்கம் ஐயா! உங்கள் நலம் எப்படி ஐயா இருக்கிறது” என்று விசாரித்துக் கொண்டிருந்த தமிழ் வாத்தியார், இப்போது அதே மொழியில் அதே கேள்வியை நாம் கேட்டுவைத்தோமானால், “அய் யாம் யாஸ் பிட் யாஸ் யே பிடில்!” (“I am as fit as a fiddle” என்பதன் தமிழ் உச்சரிப்பு) என்கிறார்! தலை சுற்றுகிறது.

இந்த தமிழாசிரிசியர் அவ்வப்போது என்னை வந்து சந்தித்துப்போகும் வழக்கம் உடையவரே.  அரசாங்கம் அளிக்கும் உபகாரச் சம்பளமான நூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு மூன்று வருஷங்களுக்கு முன்னாலேயே பி.ஹெச்.டீ டிகிரிப் படிப்பிற்கு ரெஜிஸ்டர் பண்ணிக்கொண்டவர். தன்னுடைய ஃப்ரொஃபஸர் இவர் ஆராய்ச்சிக்குத் தேர்ந்தெடுத்துக்  கொடுத்திருந்த ஸப்ஜெக்ட் மேட்டரை வைத்துக்கொண்டு, முன்னுக்கும் போகாமுடியாதும், பின்னுக்கும் வரமுடியாதும் திணறிக்கொண்டிருந்தார். ஃப்ரொஃபஸரை நம்பினால், தன் கதி அதோகதி என்பதை இரண்டு மாசம் முன்னால்தான் புரிந்துகொண்டு, அந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் கலந்து பேசிக்கொண்டிருந்தார்.

“என்ன, பி.ஹெச்.டீ படிப்பு எதுவரைக்கும் வந்திருக்கு?”

“யு சீ சார், மைன் கிவன் டிபிகல்ட் பிராப்ளம். நோ பிராபர் கய்டன்ச்” (You see sir, mine given difficult problem, no proper guidance”)

உங்க ஆராய்ச்சி எதப்பத்தினது?”

“சங்க காலத்தில் சிறுவர்கள்”

இதே மாதிரி விஷயத்தை, உங்க டிபார்ட்மெண்டில் வேற யாரோ ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்காங்க போல இருக்கே?”

“அது `சங்க காலத்தில் சிறுமியர்’; இன்னொருத்தர் `சங்க காலத்தில் குழந்தைகள்’ அப்படின்னும் ஆராய்ஞ்சிக்கிட்டிருக்காரு”

“என்னய்யா இது, சிறுவர்களும், சிறுமிகளும் குழந்தைகள்தானேய்யா!”

“இருக்கலாம் சார், ஆனால் நம்ம தமிழ் மரபுப்படி பத்து வயசுக்குக் குறைந்தவர்கள் குழந்தைகள். பத்திலிருந்து பதினைந்து வயசு வரைக்கும், சிறுவர்/சிறுமியர்”

“இருக்கட்டும். உங்க சங்க இலக்கியத்தில் இந்த மாதிரியெல்லாம் தரம் பிரிச்சிக்கிறதுக்கு வசதியா வயசு விவரமெல்லாம் சொல்லிவைச்சிருக்கமாதிரி தெரியலேயேய்யா?”

“அதேதான் சார், ஆராய்ச்சிங்கிறது! நாங்க ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடிக்கணும் சார்!”


`சங்க இலக்கியத்தில் இளங்குழந்தைகள்’  என்ற தலைப்பில் பி.ஹெச்.டீ பட்டம் பெற்ற ஆய்வேட்டிலிருந்து எடுத்த சில வாக்கியங்கள் கீழே:

“இளங்குழந்தையருக்குத் தமிழ் தாய்மார்கள் முலைப்பால் கொடுத்து வந்தனர்.  குழந்தைகளை செல்லமாக கொஞ்சிப்பேசி அமைதிபடுத்துவர். முத்தமிட்டு அன்புடன் வருடிக்கொடுப்பர். தலை சீவிவிடுவர். தலைக்கும், உடலுக்கும் எண்ணெய் வைத்துக் குளிப்பாட்டிவிடுவர். குழந்தைகள் பசியினால் அழும்போது, பாலூட்டுவர். குழந்தைகளை ஏந்திக்கொள்வர். குழந்தையின் வளர்ச்சியைப் பார்த்து பெற்றோர் மனமகிழ்ச்சியடைவர்.”

சங்ககாலத் தமிழரல்லாது வேறு யாரேனும் இவ்வாறெல்லாம் செய்திருக்கிறார்களா?

என்னே மாட்சிமை பொருந்திய ஆராய்ச்சி!

இந்த வகையான ஆராய்ச்சிகள் எதேஷ்டத்திற்கு நடந்திருக்கின்றன. இன்னும் நடந்துகொண்டே இருக்கின்றன. தமிழ் பற்றிய ஆராய்ச்சி ரிப்போர்ட்கள் தமிழிலேயே எழுதப்படுவதால், தமிழ் அறிந்தோர் மட்டுமே இவால்யுவேட் பண்ணமுடிகிறது. மாணவருக்கு தப்பாது உண்டு பி.ஹெச்.டீ டிகிரி!

தமிழ் இலக்கிய ஆராய்ச்சியின் மஹாத்மியம் இவ்வளவுடன் நிற்பதில்லை.

தமிழ் டிபார்ட்மெண்டிற்கு மட்டுமே பட்டா போட்டுகொடுக்கப்பட்ட சமாச்சாரம் அல்ல இது. சங்க இலக்கியம், சரித்திர ஆராய்ச்சிக்கும் நூத்தியெட்டு தலைப்புகளைத் தரவல்லது.

‘சங்ககாலத் தமிழர்’ என்று தமிழ் டிபார்ட்மெண்டிலிருந்து புத்தகமும், பி.ஹெச்.டீ ஆய்வும் பதிப்பிக்கப்பட்டால், சரித்திர டிபார்ட்மெண்டிலிருந்து, ‘தமிழர்கள் – சங்ககாலத்தில்’ என்ற தலைப்பில் வெளியிடப்படுகிறது. ‘புறநானூற்றில் வரலாற்று அம்சங்கள்’ என்று சரித்திரத்துறை புத்தகம் வெளியிட்டால், தமிழ்த்துறை ‘சரித்திரத்தின் பின்னணியில் புறநானூறு’ வெளியிடுகிறது.

சங்ககால அரசர்களின் வம்சாவளியைப் பற்றி, தமிழ் பண்டிதரும், வரலாற்று வல்லுநரும் வெவ்வேறாக ஆராய்கிறார்கள், புத்தகம் போடுகிறார்கள். புத்தகத்தின் தலைப்புகள் வேறுபடும், புத்தகாசிரியர்கள் வேறுபடுவர்; ஆனால் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஒன்றுக்குள் இருப்பதே, இன்னொன்றிலும்; இன்னொன்றில் இருப்பதே மற்றொன்றிலும்.

‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’.

சங்க காலத்திற்கு அப்புறம், தமிழ்நாட்டின் சரித்திரமே சூன்யமாகிவிட்டதோ என்னவோ! இப்படியே போய் பல வருஷங்களாக, தமிழ் டிபார்ட்மெண்டிற்கும், சரித்திர டிபார்ட்மென்டிற்கும் இடையில் இருக்கவேண்டிய சுவர் சரிந்துவிழுந்துவிட்டது.

இந்த நிலையை கவனித்த பேராண்மைக் குழு (deputation) ஒன்று கீழ்கண்டவாறு பரிந்துரைத்தது:

“தமிழும், வரலாறும் வேறு வேறு துறைகளாக இருப்பது அவசியமற்றது. இவ்விரண்டையும் ஒன்றாக இணைத்துவிடலாம்; சங்க இலக்கியம், சங்ககால வரலாறு இவை மட்டுமின்றி, இதர தமிழ் இலக்கியத்திலும், வரலாற்றிலும் வல்லவரான ஒருவரை ஃப்ரொஃபஸராகவும், துறைத்தலைவராகவும் நியமிக்கலாம்; ஏற்கெனவே இருக்கும் ஃப்ரொஃபஸர்களை ரீடர் பதவிக்கு அமர்த்தலாம்; இந்த மாற்றங்களால், பல்கலைகழகத்திற்கு ஏராளமான பணம் மிச்சப்படும். தமிழ் இலக்கிய மற்றும் வரலாற்று ஆராய்ச்சியின் வீச்சையும் விரிவுபடுத்தலாம்.”

இந்தப் பேரிடியில் இருந்து தப்பிக்கொள்ளும் உத்தேசத்துடன் தமிழ் ஃப்ரொஃபஸரும், வரலாற்று ஃப்ரொஃபஸரும் வைஸ்-சான்ஸலரின் ஆஃபிஸிற்கு படையெடுத்தனர்.

“தமிழ் இலக்கியத்திற்கு அழிவு காலம் வந்துவிட்டது!” என்று தமிழ் ஃப்ரொஃபஸரும், “ஆரியமாயை மீண்டும் தலையெடுக்க ஆரம்பிக்கிறது!” என்று வரலாற்று ஃப்ரொஃபஸரும் ஒப்பாரி வைத்துப் புலம்பினர்.

“சரி, உங்க நிலைப்பாட்டை ஒரு மனுவாக எழுதிக்கொடுங்க, அதை பேராண்மைக் குழுவுக்கு அனுப்பி மறுபரிசீலனை செய்யச்சொல்லி பரிந்துரை செய்யுறேன்” என்றார் வைஸ்-சான்ஸலர்.

இந்த `மறுபரிசீலனை மார்க்கத்தை’ கடைபிடிப்பது ஒன்றுக்கும் உதவாது என்பது இரு ஃப்ரொஃபஸர்களுக்கும் தெள்ளத் தெளிவாகத் தோன்றியது. தாங்கள் பலகாலமாக பயன்படுத்திவந்த வேறொரு அஸ்திரத்தைக் கையில் எடுத்தனர். தங்களுக்கு இழைக்கபடவிருக்கும் ‘அநியாயத்தை’ப் பற்றி சம்பந்தப்பட்ட மந்திரியிடம் முறையிட்டனர்.  மந்திரி எம்எல்ஏக்களைத் தூண்டிவிட்டார். சட்டசபை இந்த ‘அநியாய’த்திற்கு எதிரான கர்ஜனையால் அல்லோகல்லப்பட்டது.

“இந்த பல்கலைகழகப் பேராண்மைக்குழுவுக்கு என்ன அவசியம் இருக்கிறது?”; “குழுவை நியமித்தது யார்?”; “குழுவில் பச்சைத் தமிழர் யாரேனும் இருந்தார்களா?”; “எத்தனை பேர்?”; “நம் நாட்டிற்கும், மொழிக்கும், வரலாற்றுக்கும், பண்பாட்டிற்கும் இழுக்கைச் சேர்க்க நடத்தப்படும் சதித்திட்டமிது!”; “நம் சங்கத்தின் சிதைவுக்கும், நம் பண்பாட்டின் சீரழிவுக்கும் காரணமானவரே அயலார்;  இந்த பேராண்மைக் குழுவை நியமித்ததே விஷமத்தனம்!”; “பல்கலைக் கழக துணைவேந்தர் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டும்!” – இவ்வகையான அபத்தமான, தொடர்பற்ற கேள்விக்கணைகளும், கருத்துக்களும் பறக்கத்தொடங்கின. மந்திரிகள் “எங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள், தீர விசாரிக்கிறோம்” என்று சமாதானம் அளித்தனர். அப்போதைக்கு அவை அடங்கியது.

ஆனால் சம்பந்தப்பட்ட ஃப்ரொஃபஸர்கள் அடங்கவில்லை.

துணைவேந்தரின் குலத்தையும், கோத்திரத்தையும் பற்றிய ஆராய்ச்சியை இணைந்து மேற்கொண்டனர். அவரது ஏழாவதோ எட்டாவதோ பாட்டன் தெலுங்கர் என்றும், ஒன்பதாவதோ, பத்தாவதோ பாட்டன் கன்னடிகர் என்றும் கண்டுபிடித்தனர். துணைவேந்தர் தமிழனே அல்ல என்று தீர்மானிக்க இதைவிட வேறு காரணம் எதற்கு? இந்த ஆராய்ச்சியின் சாராம்சத்தை தமிழ் தினசரித்தாள்களில், புனைப்பெயரில் பிரசுரித்துப் பிரகடனம் செய்தனர்.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருந்த ஆராய்ச்சி மாணவன் ஒருவன் இந்த இரு ஃப்ரொஃபஸர்களின் பூர்வீகத்தைத் தோண்டித் துருவத் தொடங்கினான்.

ஒரு ஃப்ரொஃபஸரின் பெயர் ‘ஆதித்தன்’ என்பதால் அவர் சோழவம்சத்தவர் என்றும், சோழர்கள் `ஆதித்யர்’, ‘கண்டராதித்யர்’  என்ற பெயர்களை சூட்டிக்கொள்வர் என்றும் அவர் தமிழரே அல்லவென்றும்; அதேவகையில் `விஜயாதித்யன்’, ‘விக்ரமாதித்யன்’ முதலான பெயர்களை சூட்டிக்கொண்டிருந்த சாளுக்கியருடனோ, ராஷ்டிரகூடருடனோ தொடர்புடையவர் என்று அறிவித்தான். அதேபோல, ‘பொம்மன்’ என்ற பெயர்கொண்ட இன்னொரு ஃப்ரொஃபஸர் ‘கட்டபொம்மன்’ பரம்பரையாக இருக்கவேண்டுமென்றும், கட்டபொம்மன் அடிப்படையில் தெலுங்கன் என்றும், எனவே சம்பந்தப்பட்ட இரண்டு ஃப்ரொஃபஸர்களுமே பச்சைத் தமிழரல்லர் என்றும் நிரூபித்து அறைகூவினான்.

இந்தக் கொந்தளிப்பையும் வாதப் பிரதிவாதங்களையும் பயங்கரமான சச்சரவையும் கண்டு அரண்டுபோன பல்கலைகழக ஆட்சிக்குழு (University Syndicate) “பேராண்மைக் குழுவின் பரிந்துரையை அமலாக்குவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன” என்று தீர்மானம் இயற்றியது.

நன்றி: “ತಮಿಳು ತಲೆಗಳ ನಡುವೆ “(“TamiLu TalegaLa naDuve” a satire by Dr B.G.L Swamy, published by Vasantha Prakashana ) புத்தகத்தின் “ಆಧುನಿಕ ಸಂಶೋಧನೆಯ ರೀತಿ” என்னும் கட்டுரை.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே

சமீபத்திய சென்னை விஜயத்தின்போது ஒரு  நாள் அதிகாலைவேளையில், மைலாப்பூரில் இருக்கும் என் அக்காவின்  வீட்டிலிருந்து கிளம்பி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் வரை பொடிநடையாக போய்விட்டுவந்தேன். போக வர மொத்தம் 22.5 கி.மீ – ஒரு அரை மாராத்தானுக்கு சற்றே அதிகமான தூரம்.

கண்ணில் பட்ட ஒரு சுவாரசியமான ஓவியம் இதோ:  (இவற்றில், கரனை, தாங்கல், ஏந்தல் ஆகிய சொற்களை நான் கேள்விப்படுவது இதே முதல் முறை.)

IMG_7909

தமிழர்கள் பழம்பெருமை பேச ஆரம்பித்தால், மாட்டு மந்தைகள் மேய்ந்து முடித்து மாலை வீடு திரும்பும் வரை மட்டுமல்ல, மறாநாள் காலை கோழிகூவும் வரையும் அளந்துகொண்டே-ஏ-ஏ-ஏ இருப்போம். பழங்கதையையே கதைத்துக்கொண்டிருந்தால் நம் நிகழ்கால சிறப்புகளை யார், எப்போது பட்டியலிட்டு பறைசாற்றுவது? 

பீற்றிக்கொள்ளும் வாய்ப்பைக் கோட்டைவிட்டு விடக்கூடாதென்று நான் தயாரித்த, தற்கால தமிழரின் கொண்டாடத்தக்க நீர் மேலாண்மை மேன்மை அம்சங்கள் அடங்கிய இன்வெண்டரி இதோ: 

  1. 1965கள் வரையிலுமே கூட,  `நதியின்மிசை நிலவினிலே சேர நன்னாட்டு இளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஒட்டி விளையாட வர’த்தக்கதாக இருந்த கூவம் நதியையும், அடையாறு ஆற்றையும், இன்னும் பல நீர்நிலைகளையும் அடைந்தேபோன சாக்கடைகளாக சமைத்தது.
  2. ஏரிகளையெல்லாம் தொலைத்து, அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழுப்பியது.
  3. கரையெல்லாம் செண்பகப்பூவாக இருந்த கால்வாய்களையெல்லாம், ப்ளாஸ்டிக் கழிவுக் குப்பைத்தொட்டிகள் ஆக்கியது.
  4. ஆற்றுப்படுகை மணலையெல்லாம் லாரிலாரியாக திருடுவது.
  5. நீர்நிலைகளில் நீர் ஆவியாகி விரயமாவதைத் தடுக்க ஆஸ்பெஸ்டாஸ் தட்டிகளால் (patent pending) தடுப்பது.
  6. “தாராளமாக நீங்கள் அணைகட்டிக்கொள்ளலாம்” என்று இதர மாநிலங்களுக்கு அனுமதி கொடுத்து, தமிழ்நாட்டை பாலைவனமாக்கியது.
  7. தாமிரபரணித் தண்ணீரை பெப்ஸி/கோக்ககோலா கம்பெனிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுப்பது.
  8. கிருஷ்ணா நதி நீரை திறந்த வாய்க்கால் மூலமாகவே கொணரமுயன்று பெரும் விரயத்திற்கு வழிவகுத்தது.
  9. எந்தவித நிரந்தரத் தீர்வுக்கும் வழிகாணாது, மினரல் வாட்டர் பிஸினஸும், வாட்டர் லாரி/டான்கர் பிஸினஸும் நடத்தி பணம் கொழிப்பது.
  10. தண்ணீர் பிரச்சினையைத் தீருங்கப்பா அப்படின்னா, `தண்ணி’ பிரச்சினையைத் தீர்க்கத் தெருவுக்கு ஒரு டாஸ்மாக் கடை அமைப்பது.

பனைமரத்துல வவ்வாலா? தமிழனுக்கே சவாலா? இந்தப்பட்டியல் போதுமா? இல்லை இன்னுங்கொஞ்சம் வேணுமா?

மூன்றாம் உலகப்போர் தண்ணீரின் காரணமாகவே நடக்கும் என்கிறார்கள். டீஸலைனேஷன் டெக்னாலஜிக்கும், மூன்றாம் உலகப் போருக்குமான ரேஸ் தொடங்கிவிட்டது என்று சத்தியம் பண்ணிவிடலாம் என்று நினைக்கிறேன்.

இந்த ரேஸில் டீஸலைனேஷன் டெக்னாலஜி ஜெயித்துவிடும் என்ற என் கருத்து நம்பிக்கையின் அடிப்படையிலானதா, நப்பாசையின் அடிப்படையிலானதா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்!

மேலும் படிக்க:

தண்ணீர்! தண்ணீர்!

ராம், தேரி கங்கா மைலீ ஹோ கயீ !

What can you say about a sixty-five-year-old woman who died?

That she was kind. And gentle. That she loved cooking for us. And my family. And me.

Image result for praying for food

“அண்ணா! மாமி செத்துட்டாங்கண்ணா, ஊருக்குப் போயிட்டிருக்கேன்” என்று காலை 7 மணிவாக்கில் சித்ரா அக்கா ஃபோன் பண்ணியபோது, “யாரு? உங்க மாமியாரா?” என்று கேட்டேன். சித்ரா அக்கா திரும்பத் திரும்ப “மாமிண்ணா, மாமி” என்றும், நான் திரும்பத் திரும்ப “யாரு? உங்க மாமியாரா?” என்றும் 3-4 முறை மாத்தனாடிக்கொண்ட பின்னும் தெளிவில்லாமல் கேட்டதையே கேட்டுக்கொண்டும், சொன்னதையே சொல்லிக்கொண்டும் கிடந்த cycleஐ ப்ரேக் பண்ணியது சித்ரா அக்கா:

“மாமிண்ணா!, நம்ம மாமி, சிவசக்தி மாமி! ராத்திரி செத்துட்டாங்க!, வாணியம்பாடிக்கு வண்டி வைச்சு எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க!”

என்னது!!! சிவசக்தி மாமியா??? முந்தின ராத்திரி எங்களுக்கு சமைத்துப்போட்டுவிட்டு சியர்ஃபுல்லாகவே கிளம்பிய மாமி, நடுராத்திரி மூச்சுவிட திணறி, முப்பது நிமிடங்களுக்கெல்லாம் கதை முடிந்துபோன விவரம் தெரிந்து ஈமக்கடன்களில் பங்கெடுக்க, காரை எடுத்துக்கொண்டு வாணியம்பாடியை அடுத்த வடசேரிக்குப் போனேன்.

“சார், எங்கம்மா உங்களை இரண்டாவது மகனாகத்தான் நினைச்சிருந்தாங்க!” என்று மாமியின் மகன் அழுகைக்கு இடையில் சொன்னதை சந்தேகிக்க எந்த ஒரு அடிப்படையும் இல்லை.

13 வருடங்கள் எங்களுக்கு உழைத்த மாமி, வாய்விட்டு அப்படியெல்லாம் என்னிடம் சொன்னதில்லை. ஆனால், அவர் பார்வையில் ஒரு மதிப்பும், கனிவும் எப்போதுமே இருந்ததை அறிந்திருந்தேன். என் அம்மாவிடமும், என் குழந்தைகளிடத்திலும், குடும்பத்தினரிடமும் அதேபோல அன்பு காட்டியவர்.

சிவசக்தி மாமி ஒரு கர்மயோகி. ஆனால் `கர்மயோகி’ என்ற பதத்திற்கு அவருக்கு அர்த்தம் தெரிந்திருக்காது என்பதே என் அனுமானம். அவர்கள் குடும்பவழக்கப்படி வந்தவர்கள் எல்லோரும், விரல்களை எண்ணெயில் நனைத்து, இறந்தவர் தலையில் தடவுகிறார்கள். உடல் பொன்னிறமாகவேண்டி, யாகசாலையில் புரண்ட மஹாபாரதத்துக் கீரிமாதிரி, மாமியின் கடமையுணர்ச்சியில் ஒரு பங்கு எனக்கும் தொத்திக்கொள்ளவேண்டி நானும் தடவினேன்.

வீட்டிலிருந்து 50மீ தள்ளி நிறுத்தப்பட்டிருந்த ‘சொர்க்க ரதம்/அமரர் ஊர்தி’ வரை பாடையைத் தூக்கிச்செல்வோரில் ஒருவனாக, மாமியின் குடும்பத்தினரால் அனுமதிக்கப்பட்டேன். மாலை 4:30 மணிவாக்கில் இடுகாட்டில் வாய்க்கு ஒரு பிடி அரிசியும், குழிக்கு மூன்றுபிடி மண்ணும் போட்டுக் கிளம்பியபோது …

வயிறு பசித்தது.

சிவசக்தி மாமி:- தோற்றம்: – – 1953. மறைவு: 10-02-2019.  


பின்குறிப்பு: மாமியைப் பற்றி முன்னால் நான் எழுதிய கட்டுரை இங்கே.  

और एक प्रेम कहानी

“கண்டதும் காதல்” என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? எனக்கு இருக்கிறது. நிதர்சனமாக நடக்கும் ஒரு விஷயத்தை எப்படி ஒப்புக்கொள்ளாமல் இருப்பது? `இதெல்லாம் இன்னும் பிடிவிடாத விடலைத்தனத்தின் விளைவால்’, என்றும் ‘கலிகால கண்றாவி/கருமாந்திர சமாச்சாரங்கள்’ என்றும் நீங்கள் ச(லி/பி)க்கும் வகை ஆசாமியான பட்சத்தில் இந்த விஷயம் அரதப்பழசு, ராமாயணகாலத்தில் இருந்தே நடந்துவரும் வைபவமே என்று நினைவூட்டுகிறேன். 

For: 

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட, 
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்.

நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை 
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன;
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும் 
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினார்.”

வசை இல் ஐயனான `அண்ணலும்’, மருங்கு இலா நங்கையான `அவளும்’, ஒருவரையொருவர் நோக்கத்தொடங்கி, `ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று’ என்று ஆக பிடித்திருக்கும் நேரம் ஒரு நிமிடத்திற்கும் குறைவே என்று மதிப்பிடலாம்! 

நானும் கண்டேன்!, கண்டேன்!, கண்டறியாதன கண்டேன்! காதலும் கொண்டேன்!

ரம்பாவிடம்!

Screenshot from 2019-02-12 15-06-06

நீங்கள் உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடும் முன்னால், நான் சொல்லும் `ரம்பா’ மேலே காணும் ரம்பா அல்ல (அப்ப ஏன்யா அந்த ஃபோட்டோ என்றால், சின்ன வயதில் குமுதம் படித்து வளர்ந்த தோஷம் இன்னும் விட்ட குறை தொட்ட குறையாக தொடர்வது!) என்றும், ஏன் ஒரு மானுடப்பெண்ணே இல்லை என்றும் தெளிவுபடுத்திவிடுகிறேன்! (பொறந்தாலும் ஆம்பிளையாப் பொறக்ககூடாது, ஐய, பொறந்துவிட்டா பொம்பிளையை நினைக்ககூடாது என்ற சத்தியவாக்கைக் காக்கும் சந்தன் நான், உங்களுக்கே தெரியும்)

நான் சொன்ன ‘ரம்பா’ என் வீட்டை பெருக்கி சுத்தம் செய்யும் பொறுப்பை சமீபத்தில் ஏற்றிருக்கும் Roomba யந்திரம்! ரம்பாவைப் பற்றிச்சொல்லப் புகுமுன், ஒரு சின்ன பீடிகை:

வந்த நாள் முதல் இந்த நாள் வரை, வானம் மாறவில்லை! வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை!

எங்கள் வீட்டு வேலைக்கார அக்காவின் வேலைத்தரமும் மாறவில்லை!

ஆரம்ப காலங்களில், Law of conservation of mass (“… for any system closed to all transfers of matter and energy, the mass of the system must remain constant over time, as system’s mass cannot change, so quantity cannot be added nor removed …”) என்பதை நிரூபிப்பதே இந்த அக்காவின் வாழ்க்கையின் நோக்கம் என்ற சந்தேகம் வரும் – ஏனென்றால், அவருடைய வீடு பெருக்கும் ஆல்காரிதம் கீழ்கண்டதே என்பது என் கணிப்பு:

// version 2.34
துடப்பத்தை கையில் எடுக்கவும்;
இன்னும் “clean” பண்ணவேண்டிய ரூம்கள் இருக்கும் வரை {
        அடுத்த ரூமுக்குச் செல்லவும்;
        குப்பை, தூசி, தும்புகளை Point Aயில் இருந்து Point Bக்குத் தள்ளவும்;
        ரிங்க் ஆகும் ஸெல் ஃபோனை அட்டெண்ட் பண்ணிப் பேசவும்;
        குப்பை, தூசி, தும்புகளை Point Bயில் இருந்து Point Cக்குத் தள்ளவும்;
        ரிங்க் ஆகும் ஸெல் ஃபோனை அட்டெண்ட் பண்ணிப் பேசவும்;
        குப்பை, தூசி, தும்புகளை Point Cயில் இருந்து Point Aக்குத் தள்ளவும்;
        ரிங்க் ஆகும் ஸெல் ஃபோனை அட்டெண்ட் பண்ணிப் பேசவும்;
 }
துடப்பத்தை கீழே வைக்கவும்.

சொல்லி சொல்லி சலித்துப்போய், கடைசியில் நம் தலைவிதி இதே என்று நொந்துபோய் கிடந்த என் காதில் தேனாக வந்து பாய்ந்த செய்தி என் தங்கை தீபாவின் வீட்டில் என் அம்மா பார்த்ததாக சொன்ன ஹவுஸ் க்ளீனிங்க் ரோபாட் – ரூம்பா!

Amazonல் ஆர்டர் டெலிவரி ஆன உடனேயே, எனக்கான dedicated call centreக்கு (தீபாவுக்கு 🙂 ) ஒரு கால் போட்டு, “அம்மா, தாயே, நான் ஒரு ஸாஃப்ட்வேர் இஞ்சினியர், வீட்டில் லைட் பல்ப் மாத்தக்கூட ஆள், அம்பு உதவி தேவை எனக்கு. அபயம் நீயே” என்று சரணாகதி ஆனேன். “Even a seven year old can operate that guy! I can’t believe you want help for that!” என்று முதலில் அலுத்துக்கொண்டாலும், தீபாவின் உதவியால், ஒரு வழியாக இனிஷியல் ஹிக்கப்ஸ்களை கடந்து கமிஷன் பண்ணிவிட்டேன் ரூம்பாவை, ரம்பா என்று நாமகரணம் சூட்டியும்!

பட்டனைத் தட்டிவிட்டால், ரூம் மொத்தத்தையும் பளிச்சென்று க்ளீன் பண்ணிவிட்டு பின் தானே தன் சார்ஜிங்க் ஸ்டேஷனில் வந்து உட்கார்ந்துகொள்கிறது ஒய்யாரமாக – உங்கள் ஸெல்ஃபோனுக்கு ஒரு cleaning reportஐ அனுப்பிவிட்டு (map உடன்). 

தரையில் சாப்பாடு போட்டு சாப்பிடலாம் – அவ்வளவு சுத்தம் (ஒரு பேச்சுக்கு சொன்னேங்க)

இரண்டு நாள் வீடு க்ளீன் பண்ணியபின் ரம்பாவின் பில்ட்-இன் குப்பை கலெக்ஷன் டப்பி நிறைந்துவிட அதுவே டப்பியை empty பண்ணச்சொல்லி உங்களை வேண்டிக்கொள்கிறது. The first time you do this, you are in for a revelation – the amount of dust/dirt you have been living with could be shocking!

என்ன, வீடெல்லாம் க்ளீன் பண்ணும் மிஷினுக்குத் தன்னைத் தானே க்ளீன் பண்ணிக்கொள்ளத் தெரிவதில்லை. தன் குப்பை கலெக்ஷன் டப்பியை காலி பண்ணவோ, அல்லது அழுக்காகிவிடும் ஸென்ஸர்களை க்ளீன் பண்ணவோ நம்மளைத் தான் கூப்பிடுகிறது.

இதை பார்த்துவிட்டு “That strikes me as being high maintenance, Appa!” என்றாள் என் மகள். “Relative to the high maintenance things I am used to, this is nothing sweetie!” என்றேன் ஒரு deadpan expressionஐ முகத்தில் வரவழைத்துக்கொண்டு.

 தன் கண்களை மேலும் கீழுமாக ஒரு உருட்டு உருட்டி, “Is this one of your oblique utterances with a subtle message addressed to me, Appa? You are suggesting perhaps that I am high maintenance?” என்ற மகளை அணைத்து “சீச்சீ! நான் எப்போ சொன்னேன் அப்படியெல்லாம்?” என்று கேட்டு, உச்சிதனை முகர்ந்து கர்வம் ஓங்கிவளர்ந்தபோது என் முகத்தில் இருந்த புன்னகையை அவள் பார்த்திருக்க வாய்ப்பில்லை!

 

 

 

 

கிருஷ்ணாவின் சேவை நாட்டுக்கு (நிஜமாகவே) தேவை!

`ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இண்டியா’வும் `ஸ்பிக் மக்காய்’யும் இணைந்து நடத்தவிருந்த இசை மற்றும் நடன விழாவில் பங்கேற்றுப் பாட பிரபல கர்நாடக சங்கீத விற்பன்னர் திரு டீ.எம். கிருஷ்ணா அவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு, ட்விட்டரில் கிளம்பிய எதிர்ப்பின் காரணமாக நிகழ்ச்சியே ரத்தானதுப் பற்றிப் படித்து அதிர்ச்சியடைந்தேன். (ரத்தா, ஒத்திவைப்பா என்பதில் இன்னும் முழுத்தெளிவில்லை, முலாம் பூச்சுப் பேச்சால்)

டீ.எம். கிருஷ்ணா நடனம் ஆடப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தால் கண்டனப் புயலில் குறை கண்டிருக்க முடியாது 🙂

ஆனால் பாட? 😦

கிருஷ்ணா மீதான சார்ஜ் ஷீட்தான் என்ன? அவர் கர்னாடக சங்கீதப் பாணியில் அல்லாவையும் ஏசுவையும் பற்றிப் பாடுகிறாராம். மோடி அரசுக்கு எதிராக பல கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவிக்கிறாராம். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் பலர் மதவெறியர் என்று சொல்கிறாராம். சம்பிரதாயத்திற்கு விரோதமான கருத்துக்களைக் கொண்டவர் என்பதால் ஏற்கனெவே பல சபாக்களால் புறக்கணிக்கப்படுபவராம்.

இத்யாதி, இத்யாதி …

Image result for T M krishna

ஒருவருடைய சொந்த கருத்துக்காக, கூட்டம் சேர்த்துக் கூச்சல் போட்டு கட்டப் பஞ்சாயத்து நடத்தி, கச்சேரி வாய்ப்புக்களைக் கெடுப்பது அநியாயம்! 

இந்த மாதிரி சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், `பிஜேபி ஆட்சிக்கு வந்தபின் நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து ஒரு climate of intolerance ருவாகிக் கொண்டிருக்கிறதா?’ என்ற சர்ச்சைக்கு அவசியமே வேண்டாம்.

ஆன்னா, ஊன்னா, எதற்கெடுத்தாலும் “பிரதமர் ஏன் இந்த விஷயத்தில் மௌனம் காக்கிறார்?” “ஏன் அவர் இதுபற்றி கருத்து சொல்லவில்லை?” என்று அவ்வப்போது கேள்வி எழுப்பப்படுகிறது.

நாட்டின் பிரதமர் ஒவ்வொரு விஷயத்திலும் கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தால், வேறு வேலையே பார்க்க நேரம் இருக்காது!

ஆனால், நாட்டின் அடிப்படை குணாதிசயத்தை நிர்ணயிக்கும் விஷயங்களில் மௌனம் காப்பது விபரீதம்.

தொண்டர் அடிபொடிகள், தலைவரின் ஆசியில்லாமலா அராஜகம் நடத்துகிறார்கள் என்ற சந்தேகம் எப்படி வலுக்காமல் இருக்கும்?

Against great odds, Modi seems to have captured the imagination and the good will of a large section of well meaning population.

This is entirely his to lose!

பின்குறிப்பு: கிருஷ்ணாவின் சேவை நாட்டுக்குத் தேவை! என்ற தலைப்பில் வஞ்சப்புகழ்ச்சியாக ஒரு நையாண்டிக் கட்டுரை இரண்டு மாதங்கள் முன்னால் இங்கே எழுதியிருந்தேன். சிலர் ரசித்த போதிலும் மனதில் இருந்த ஒரு உறுத்தலுக்குப் பிராயச்சித்தம் இன்று கிடைத்தது: 

கிருஷ்ணாவின் சேவை நாட்டுக்கு நிஜமாகவே தேவை!

காள் காள் என்று கதறி கச்சேரியைக் குலைத்த இந்தக் கூட்டம் அறியாதது கர்நாடக இசை என்ற கற்பூர வாசனை மட்டுமல்ல. 

கருத்து சுதந்திரம் என்னும் கற்பூர வாசனையும் தான்!

 

Howth Cliff Walk – A Trekelogue

So, what does a teetotaller and a brahmachari to boot, do on a Sunday in Dublin ? With pub hopping, discotheques and cabaret halls out of reckoning and most other tourist attractions ticked off during previous visits, the calendar looked wide open.

During my last visit to Dublin I had planned to do the Bog of Frogs coastal cliff hike at Howth, just a hop, skip and jump away from Dublin, but promptly fell sick on day one and had to stay put for the most part (sob story here). With the Weather Goddess in a mellow mood, time was ripe for a day outdoors.

Image result for howth cliff walk

Howth is connected to downtown Dublin via the metro (DART) and the various cliff walk trails – of differing distances and degrees of strenuousness – start right outside the Howth Dart station.

A first timer need not worry about finding the trail head – You just have to get out of the train station and follow the crowd. It almost feels like the அறுபத்து மூவர் உற்சவம்!  Fortunately, as it usually happens, the 80-20 rule – that 80% of people drop out within the first 20% of the distance – kicks in pretty soon and you do get to enjoy some degree of solitude.

The most curious part was the Bog of Frogs loop is that it has the feel of Escher’s stairs/waterfalls. You keep climbing up and up for the most part with hardly any discernible descent, but it is a loop!

Image result for escher waterfall

It is a nice hike (12 km loop, roughly 3 hours, 60 “floors”) but it helps to start out with reasonable expectations and not be swayed by the all the gloating reviews on the WWW. The views are certainly nice, though by no measure “stunning”, “amazing”, “spectacular” or “brilliant” – the set of adjectives that routinely feature in the various blogs about this trail.

Good shoes and rain coat are a must – there is absolutely no protection from the elements.


So, what is it with politicians and their penchant for coveting credit for various and sundry inventions ? If Al Gore invented the internet, can Lutyen’s darling, the learned (no, by that I don’t mean stuffy, only erudite) Dr Tharoor be left too far behind?

According to this interview he invented the word prepone it seemsAstonished Face on EmojiOne 4.0, although he admits he can’t prove parentage.

Methinks it is all a bit rich even for Dr Tharoor that the lady conducting the the interview can readily be pardoned for bursting out with peals of laughter at the claim.

I will be honest and own up here that my immediate and instinctive response was to cry foul at what I perceived to be an attempt at self-aggrandizement. I was going to borrow a colorful expression from Tharoor himself  Mehdi Hasan and fulminate that it is all an exasperating farrago of distortions, misrepresentations & outright lies…

… but as I have resolved to be less cynical in life, I will not do all that and instead simply thank Dr Tharoor for enriching the English language and our lives this way.

This long preamble is so I can stake my own claim, with proof. I am the independent co-inventor of the word Trekelogue and in any case deserve all the credit for “popularizing” it.

Hey, don’t take my word for it – google it and see for yourself! At the moment 7 out the 8 links that show up in that google search reference my Journey to the centre of the earth

 

Yes, Minister! (or) The harem and its eunuchs

The Right Honorable Minister of state for external affairs (No, the choice of his portfolio is not an elaborate insider joke, I believe) Sri M.J. Akbar is back in India after his state visit of various African nations. And the Rt. Hon. minister has promptly gotten down to the business of defending himself in the matter of several charges of predatory sexual behavior, harassment and molestation – all “false and fabricated, spiced up by innuendo and malice” of course – by various and sundry women with ulterior motives.

“Accusation without evidence has become a viral fever among some sections. Whatever be the case, now that I have returned, my lawyers will look into these wild and baseless allegations … that have caused irreparable damage to my reputation and goodwill …”, fulminates the minister. One does applaud the vigorous defence mounted by the minister and hope and pray that the long arm of law comes to the rescue of the meek and defenseless to silence these scurrilous allegations by partisan hacks!

How dare they!

p01ssr5w

“There’s no story. But a sea of innuendo, speculation and abusive diatribe has been built around something that never happened. Some are total, unsubstantiated hearsay; others confirm, on the record, that I didn’t do anything,” he said.

Yes! Minister!

Wake up, smell the coffee and take note, folks!

The claims where he was accused of unwanted kisses, unwelcome groping, fondling of breasts and molestation in office etc – are the “total unsubstantiated hearsay”, “innuendo, speculation and abusive diatribe” and the claims where the accusers say he backed off when they firmly rebuffed his unwelcome advances confirm that “he didn’t do anything”.

“If I didn’t do anything, where and what is the story?” thunders the Rt. Hon. Minister.

Yes! Minister! A worthy question indeed!

Ladies and gentlemen, boys and girls ! It is time to rewrite the definition of sexual harassment! If there is no sexual intercourse, nothing happened folks! 

If you thought sexual harassment included repeated unwelcome overtures, use of position of power and authority to coerce sexual favors, creation of hostile work environment by unwanted sexual advances etc …

Think again! 

Oh, while we are on the subject of rewriting the definition of sexual harassment, can we also revisit our ithihasas ? Nothing was done to Panchali by the Kauravas! They didn’t manage to disrobe her after all! Nothing happened! There’s no story. Just an exasperating farrago of distortions, misrepresentations & outright lies being broadcast by unprincipled show-women masquerading as a journalists. But a sea of innuendo, speculation and abusive diatribe has been built around something that never happened!

We hear you Mr Rt Hon. Minister, when you say “Why has this storm risen a few months before a general election? Is there an agenda? You be the judge.” We so totally share your outrage at the calumnious charges calculated to inflict maximum damage just before the elections.

Mantriji, can we set aside the sordid past for a moment and look at the next steps ? May we consider a small measure to mend the damage irreparable though it may have been to your reputation and goodwill ?

You see, we are told that before you hopped on to the present political dispensation, you were a Congressman. By virtue of having been a Congressman or in any case by having been a journalist (no, by that I don’t mean you are a has been journalist), you have certainly heard of this diminutive man by name Lal Bahadur Shastri??

Rings a bell ? Surely ?

Shastriji had several claims to eternal fame given his yeoman service to the country. But funnily, we plebeians remember him for the one utterly stupid thing he did: responding to a major railway accident in Ariyaloor, Shastriji resigned his position assuming moral responsibility! To me it does not look like assumption of responsibility moral or otherwise, but a sheer dereliction of duty and abdication of responsibility.

You Mantriji, have the opportunity of a lifetime to do one up on Shastriji! Not grandstanding in a frivolous manner as he, but in support of a truly worthy cause.

This is your chance to stand up for the countless women battling sexual harassment at work places; to send a clear and unambiguous message that there will be zero tolerance for sexual harassment in this Government of the people, by the people and for the people; to show that the buck stops with you; to set the highest standards of probity in public domain…

In order for that, may we suggest that you step down until your honor and reputation is cleared by a bipartisan parliamentary investigation committee? That, I am sure you will agree, is a small price to pay to be in public service, to forever cover yourself in glory even more than Lal Bahadurji ?

We have no doubt that there will be countless others in your own party and public, who will urge you to stand your ground; who will help reinforce your (what some slander mongers will call self delusional) belief that these charges are all an orchestrated attempt to malign your noble name and the august government you so distinguishedly serve:

Pay no heed to these anukoola shatrus Mr Right Honorable Minister! After all, what is a harem without its share of eunuchs ?

Go ahead,  Do the right thing and the honorable thing.

God bless you.


P.S: Apologies to the gentle if clumsy buffoons at Yes Minister! for conflating them with ministers of an altogether different breed.

P.P.S: If you were wondering whether in composing his defence, the Rt. Hon. Minister had the services of a young female assistant to look up the dictionary or a thesaurus that was strategically positioned so the young woman had to bend down to consult the tome, be decidedly assured that you have a perverse mind.

P.P.P.S: Why hasn’t the Congress launched a full frontal assault on this matter ? Likely because they have a bunch of skeletons in their own cupboard ? Sigh.